புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 14 போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே ரஃபேல் விமான பேரம் தொடர்பாக பல சர்ச்சைகளும், வழக்குகளும் எழுந்து அவை முடிந்த நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறது.



ரஃபேல் விமான ஒப்பந்தத்தை பெற பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனம் இந்திய இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கியுள்ளது என்றும், இந்த ஒப்பந்தத்தில் பெருமளவு ஊழல் நடைபெற்றிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறது.


இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, நாட்டின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்தில் ஒரு தனிநபர் எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடியும்? என்றும், இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளார்.


Also Read | இந்தியாவிற்கு வர தயாராகும் ரஃபேல் விமானம்


மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது, இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு மோடி அரசு பதில் அளித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். 


ரஃபேல் ஒப்பந்தத்தில் இருந்து ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை (anti-corruption clauses) நீக்கியது ஏன் என்பதற்கு மோடி அரசு பதில் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.21,075 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது, எனவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.



கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் அது.


ALSO READ | ரஃபேல் போர் விமானங்கள் ஏன் அம்பாலாவுக்கு கொண்டு வரப்படும் ரகசியம் என்ன?


இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மறைகேடு இல்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. 


இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ரஃபேல் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறையிடப்பட்டது. 


இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு, ரஃபேல் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.


ALSO READ | Rafale Updates: இந்தியாவை அடைந்த ரஃபேல் போர் விமானம்; 144 தடை உத்தரவு


மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக FIR பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர். இதன் மூலம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள்  நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தது. 


இந்த நிலையில் ரஃபேல் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மீண்டும் காங்கிரஸ் தெரிவித்திருப்பதற்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்வது காங்கிரஸின் வழக்கமாகிவிட்டது என்று பாரதிய ஜனதா கட்சி கண்டனங்களை எழுப்பியிருக்கிறது.


உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த போர் ஜெட் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த  ரஃபேல் விமானங்கள் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை.


Also Read | ரஃபேல் விமானங்களை தயாரிக்கக்கூடிய திறன் HAL-க்கு உள்ளது: HAL தலைவர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR