மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?
Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
Isha Ambani Piramal Costume In Mameru Ceremony: உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம்தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறது. ஆனந்த் அம்பானியின் திருமணம் சார்ந்த தகவல்கள், ஏற்பாடுகள் அனைத்தும் நெட்டிசன்களால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த திருமணம் விழா வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி சுப விவாஹம், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசிர்வாதம் மற்றும் ஜூலை 14ஆம் தேதி மங்கல் உத்சவ் என்றழைக்கப்படும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என மூன்று நாள்கள் கோலகலமாக திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி 52 ஆதரவற்ற குழந்தைகளுடன் அம்பானி குடும்பத்தினர் திருமணத்தை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள்
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் மூன்று நாள் கொண்டாட்ட நிகழ்வு பலராலும் வியந்து பார்க்கப்பட்டது. இதில் இந்திய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி உலகின் பல முன்னணி பிரபலங்களும் பங்கேற்றனர். தொடர்ந்து, சொகுசு கப்பலிலும் இரண்டாவது கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முக்கியமாக வெளிநாட்டு பிரபலங்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டது. மே 29ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு இத்தாலி முதல் தெற்கு பிரான்ஸ் வரை சென்ற அந்த சொகுசு கப்பலில் நடந்த கொண்டாட்டத்திலும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க | முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மாமேரு நிகழ்ச்சி
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு குஜராத் பாரம்பரிய திருமண முறைப்படி மாமேரு என்ற நிகழ்ச்சி மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்தது. இந்த மாமெரு சடங்கு என்பது மணமகனின் தாய்வழி குடும்பத்தால் திருமணம் நடைபெறப்போகும் தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வாகும். இதில், மணமகனின் தாய்வழி மாமன்கள் மற்றும் உறவினர்கள் தம்பதிகளுக்கு பாரம்பரிய பரிசுப் பொருட்களை வழங்குவதும் இதில் அடங்கும்.
கவனம் ஈர்த்த ஆடைகள்
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் மணமகளான ராதிகா மெர்ச்சன்டின் ஆடை மிகுந்த கவனத்தை ஈர்த்தது. மாமேரு நிகழ்வில் ராதிகா மெர்ச்சன்ட் குஜராத் பாரம்பரிய உடையான பாந்தினி லெஹெங்காவை அணிந்திருந்தார். மிகுந்த வேலைப்பாடுகளுடன் துர்கா தேவியின் ஸ்லோகங்களுடன் அவர் அணிந்திருந்த தங்க ஜரிகை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. திருமண நிகழ்வு என்றாலே மணப்பெண்ணின் ஆடை மட்டும்தான் கவனம் ஈர்க்குமா என்ன... அந்த நிகழ்வில் ஆனந்த அம்பானியின் மூத்த சகோதரியான இஷா அம்பானி பிரமாலின் ஆடையும் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜொலித்த இஷா அம்பானி
இஷா அம்பானி பிரமால், மாமேரு நிகழ்வில் ஆரஞ்சு நிற ரஃபிள் புடவையில் அழகாக தோற்றமளித்தார். பாந்தனி வகை ஆடையில் கண்ணாடி, தனித்துவமான நூல் மற்றும் கட் டன்னா என்றழைக்கப்படும் கலை வேலைப்பாடுகளால் அது அலங்கரிக்கப்பட்டது. குறிப்பாக, இஷா அம்பானி அணிந்திருந்த அந்த தங்க ஜரிகை அவரின் அழகுவாய்ந்த உடையை முழுமையடைச் செய்தது எனலாம். இந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அர்பிதா மேத்தா இதை வடிவமைத்துள்ளார். இஷா அம்பானியின் ஆடை குறித்து அர்பிதா மேத்தா அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், காலத்தால் அழியாத பாரம்பரியத்தை, நவீன பாணியுடன் இணைத்து இந்த ஆடை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | முகேஷ் அம்பானியின் மகனுக்கு ஒரு மாதத்திற்குள் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ