டிசிஎஸ் இடைக்கால தலைவராக இஷாத் ஹுசைன் நியமனம்
![டிசிஎஸ் இடைக்கால தலைவராக இஷாத் ஹுசைன் நியமனம் டிசிஎஸ் இடைக்கால தலைவராக இஷாத் ஹுசைன் நியமனம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2016/11/10/110315-tcs.jpg?itok=JsIvL20H)
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைவராக இஷாத் ஹூசன் நியமிக்கப்பட்டுள்ளதாக டாடா நிர்வாக குழு இயக்குநர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். புதிய சேர்மன் நியமிக்கப்படும் வரை ஹூசைன் அப்பொறுப்பை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.