அயோத்தியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடுகிறது பாகிஸ்தானின் ISI: பகீர் Report!!
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ISI, உத்திர பிரதேசத்தில், அயோத்தியில், ராம ஜன்ம பூமியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ISI, உத்திர பிரதேசத்தில், அயோத்தியில், ராம ஜன்ம பூமியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய உளவுத்துறை நிறுவனமான R&AW-க்கு கிடைத்துள்ள உளவுத் தகவல்களின் படி, ஆஃப்கானிஸ்தானில், ISI, லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாதிகளுக்கு தாக்குதலுக்காக பயிற்சி அளித்து வருகிறது.
அயோத்தியில் தாக்குதல் நடத்த மூன்று முதல் ஐந்து குழுக்களை பாகிஸ்தான் உளவு நிறுவனம் இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
மூன்று பயங்கரவாதக் குழுக்களும் தனித்தனியான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்றும் அது இந்தியாவிற்குள் உள்நாட்டு சதியால் ஏற்பட்ட ஒரு தாக்குதலாகத் தோன்றும் வகையில் இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் விரும்புகிறது என்று இந்திய புலனாய்வு அமைப்பு வெளிப்படுத்தியது.
வி.வி.ஐ.பிக்கள் பயங்கரவாதிகளின் இலக்கில் இருப்பார்கள் என்பதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது, இதனால் இந்த தாக்குதலின் தாக்கம் பெருமளவில் உணரப்படுகிறது. இதற்கிடையில், டெல்லி, அயோத்தி (Ayodhya) மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ALSO READ: ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண் எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராம ஜன்மபூமிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 2019 ஆம் ஆண்டு, இந்த நாளில்தான், ஜம்மு காஷ்மீரிலிருந்து 370 ஆவது சட்டப்பிரிவு அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஆகஸ்ட் 4,5 ஆம் தேதிகளில் அயோத்தியில் அனைத்து கோயில்களும் திறப்பு....