பாகிஸ்தானின் (Pakistan) உளவு நிறுவனமான ISI இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பதற்காகவும், ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir) உள்ள பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தவும், OGW எனப்படும் ஓவர் கிரவுண்ட் ஒர்க்சில் பெண்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசாங்கத்தின் வலுவான நடவடிக்கைகளின் காரணமாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானிடமிருந்து நிதி பெறுவது கடினமாகி விட்டதால், பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்க ISI ஒரு டிஃபின் பாக்ஸ் திட்டத்தை (Tiffin Box Plan) வகுத்துள்ளது என்று பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.


அண்மையில், லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகளுக்கு டிஃபின் பாக்சுகள் மூலம் பணம் அனுப்பிய தோடாவைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஜம்மு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் வசம் இருந்த டிஃபின் பாக்சிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படது. இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஒரு முக்கிய திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.


பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து பயங்கரவாதிகளை பாதுகாக்க ISI, பெண்களின் உதவியை எடுத்து வருவதாக பாதுகாப்பு முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெண் OGW, பயங்கரவாதிகளின் குழுவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். ஏனெனில் பெண்கள் அவர்களுடன் இருந்தால், அந்தக் குழு ஒரு குடும்பம் போல் காட்சியளிப்பதால், அவர்களால் பாதுகாப்புப் படையினரை எளிதாக ஏமாற்ற முடிகிறது.


வல்லுநர்களின் கூற்றுப்படி, சில சந்தர்ப்பங்களில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி காஷ்மீரில் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கும் இந்தப் பெண்கள் உதவுகிறார்கள்.


பாதுகாப்பு அமைப்புகளின் கூற்றுப்படி, பயங்கரவாதிகளுக்கு, மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மற்ற பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் தளபதிகளுடன் குறியீட்டு சொற்களின் மூலம் தொடர்பில் இருக்கவும் ISI அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் அவர்களைப் பற்றிய தகவல்களை எளிதில் சேகரிக்க முடியாத வகையில், தங்கள் நடமாட்டத்தை குறைந்த அளவில் வைத்திருக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ALSO READ: ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...


தற்போது ஏராளமான பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பதகாவும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன. கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே 380 பயங்கரவாதிகள் பயங்கரவாதத் தளங்களில் இருப்பதாகவும், இந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய பாகிஸ்தான் இராணுவம் வழக்கமான போர் நிறுத்த மீறலை மேற்கொண்டு வருவதாகவும் அறியப்படுகிறது.


ஜீ நியூஸுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்களின்படி, இந்திய பாதுகாப்புப் படையினரைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் பல எல்லைப் பகுதிகளில் BAT எனப்படும் எல்லை நடவடிக்கைக் குழுவையும் இயக்கியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும் பல பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர். 


ALSO READ: இந்தியாவில் மத கலவரங்களை தூண்ட ISI சதி.. VOIP அழைப்பின் மூலம் அம்பலம்...!!!