தில்லியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு ISIS பயங்கரவாதி கைது! விரட்டிப் பிடித்த Delhi Police!!
தேசிய தலைநகர் தில்லியில் ரிங் ரோடு அருகே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு நடந்த என்கௌண்டரில் ISIS பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார்.
புதுடெல்லி: தேசிய தலைநகர் தில்லியில் (Delhi) ரிங் ரோடு அருகே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு நடந்த என்கௌண்டரில் ISIS பயங்கரவாதி (ISIS Terrorist) ஒருவர் பிடிபட்டார். அவர் வசம் இருந்த இரண்டு அதி நவீன வெடிக்கும் சாதனங்களை (IEDs) போலீசார் மீட்டனர்.
தகவல்களின்படி, ஒரு வெடிகுண்டு செயலிழப்பு குழு (Bomb squad) சம்பவ இடத்திற்கு வந்து பயங்கரவாதியிடமிருந்து மீட்கப்பட்ட IED களை செயலிழக்கச் செய்வதில் ஈடுபட்டுள்ளது.
பிடிபட்ட ISIS பயங்கரவாதி அபு யூசுப் கான் (Abu Yusuf Khan) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. டெல்லியில் கரோல் பாக் மற்றும் தௌலா குவான் இடையே உள்ள ரிட்ஜ் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இவர் பிடிபட்டார். அவர் பிடிபட்டவுடன் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர்.
“தௌலா குவான் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, எங்கள் சிறப்புப் படை, IED-க்களுடன் ஒரு ISIS பயங்கரவாதியை பிடித்துள்ளது” என்று தில்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (DCP) பிரமோத் சிங் குஷ்வாஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ALSO READ: ஷெல் கம்பெனி மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு 2 கோடி நன்கொடை அளித்த தொழிலதிபர்கள் கைது…!!
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் விசாரணை நடந்து வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லியில் யூசுப்புக்கு வேறு சில தோழர்களும் உதவி செய்துள்ளதாக போலீசார் நம்புகின்றனர். அவர்களைப் பிடிக்கவும் தேசிய தலைநகரில் வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
தில்லியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் (Terrorist Attack) ஒன்றுக்கு இந்த அமைப்பு ஏற்பாடு செய்துகொண்டிருந்ததாகவும் அதற்கான ஆயுத சேகரிப்பு நடந்து கொண்டிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பயங்கரவாதி பிடிபட்டதன் மூலம் ஒரு மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: ‘இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத போரை நடத்துவோம்’ இந்தியாவை மீண்டும் சீண்டும் பாகிஸ்தான்!!