இஸ்ரேலிய தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த ஐ.இ.டி குண்டுவெடிப்புக்குப் பின்னர், டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேலிய தூதரக (Israel Embassy) குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்ற வகையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்களை விசாரித்து கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக காவல் துறை  அதிகாரி தெரிவித்தார். தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் சில கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. 


முன்னதாக, புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஏற்பட்ட வெடிப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கென்ஜியுடன் பேசினார். இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு குறித்து எஸ்.ஜெய்சங்கர், "நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்" என்றார். 


இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருக்கு உறுதியளித்தார். 


இது தொடர்பாக தீவர விசாரணைகள் நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பேசியுள்ளார்.


குண்டுவெடிப்புக்குப் பின்னர் உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள அனைத்து எல்லை பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 


அயோத்தியிலும் ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதனை இதைக் கருத்தில் கொண்டு டெல்லியில் குண்டுவெடிப்பின் பின்னர் அயோத்தியிலும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 


ALSO READ  | Breaking: தில்லியில் குண்டு வெடிப்பு, இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடித்தது குண்டு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR