விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் முயற்சியில் முக்கியமான ஒரு திருப்பம் வந்துள்ளது. விண்வெளிக்கு மனிதனை கொண்டு செல்லும் ராக்கெட்டுக்கான என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக முடித்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிப்பட்ட சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு (2025)  செயல்படுத்தப்படுவிருக்கும் நிலையில், அதற்கான எஞ்சின் சோதனைகள் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களையும் எடுத்து செல்வதற்கு பொருத்தமான ராக்கெட் LVM3 என இஸ்ரோ தேர்ந்தெடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட 8 டன் எடைகொண்ட பொருட்களை பூமியிலிருந்து 200 கி.மீ உயரத்திற்கு கொண்டு செல்ல  LVM3 ராக்கெட் உதவும். சந்திரயான் 3 மிஷனிலும் LVM3 ராக்கெட்தான் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. FDல் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கி, டபுள் வருமானம் நிச்சயம்


ஆனால், ககன்யான் திட்டத்திற்காக LVM3 ராக்கெட்டில் சில மாறுதல்களை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. ராக்கெட்டை உந்தி தள்ள உதவும் CE20 கிரையோஜெனிக் என்ஜினை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாகவும் அதில் வெற்றியடைந்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.



மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் உள்ள சோதனை மையத்தில் கடந்த 13ம் தேதி (2024, பிப்ரவரி 13) CE20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நடத்தப்பட்டது. இதில் என்ஜினின் செயல்திறன், அதிகபட்ச தாக்குப்பிடிக்கும் திறன், உந்து சக்தி உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 


என்ஜின் குறைந்தபட்சம் 6350 நொடிகள் இயக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இஸ்ரோ மேற்கொண்ட பரிசோதனையில், CE20 கிரையோஜெனிக் என்ஜின் 8810 நொடிகளில் வெவ்வேறு காலநிலைகளில் சிறப்பாக இயங்கியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.  
இந்த எஞ்சின், எல்விஎம்3 வாகனத்தின் மேல் கட்டத்தை இயக்கும் மற்றும் 442.5 வினாடிகளின் குறிப்பிட்ட உந்துவிசையுடன் 19 முதல் 22 டன்கள் உந்துதல் திறனைக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | AI: பங்குச் சந்தையிலும் பட்டையைக் கிளப்பும் செயற்கை நுண்ணறிவு! ஒரு நாளில் பில்லியனராகலாம்!


கடுமையான சோதனை இயந்திரத்தின் திறமையை நிரூபித்துள்ளது. முதல் ஆளில்லாத விமானம் LVM3 G1 க்காக அடையாளம் காணப்பட்ட CE20 இன்ஜின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


CE20 இன்ஜினின் மனித மதிப்பீட்டிற்கான தரைத் தகுதிச் சோதனைகள், பெயரளவிலான இயக்க நிலைமைகளின் கீழ் நிரூபண சோதனைகள், சகிப்புத்தன்மை சோதனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடு மற்றும் உந்துதல், கலவை விகிதம் மற்றும் உந்துசக்தி தொட்டி அழுத்தம் என பல கட்ட சோதனையை தாண்டிவிட்டது. 


இந்த வெற்றியுடன், ககன்யான் திட்டத்திற்கான CE20 இன்ஜினின் அனைத்து தரைத் தகுதிச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. 


மேலும் படிக்க | மக்களின் நம்பிக்கையை பெற தீவிரமாக முயற்சிக்கும் சீனா! சீனாவில் பொருளாதார சீர்திருத்தம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ