பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..!

Top 10 Indian companies: தெற்காசியாவில் உள்ள பாகிஸ்தான் உட்பட சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட, இந்தியாவில் உள்ள சில இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2024, 09:02 PM IST
பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய ‘சில’ டாப் இந்திய நிறுவனங்கள்..! title=

Top Indian Companies With Higher Value than 6 South Asian Economies: இந்திய பொருளாதாரம், மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள சில நிறுவனங்கள், தெற்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளின், ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. ஐ எம் எப் முதல் உலக வங்கி வரை, பல பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மிக வேகமாக இருப்பதாக கூறியுள்ளன. ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா கால நெருக்கடிகளையும் மீறி, வெற்றிகரமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய நாடுகளின் ஜிடிபி யை விட அதிக சந்தை மதிப்பு கொண்ட இந்திய நிறுவனங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (Reliance Industries Ltd), டாடா கன்சல்டன்சி (Tata Consultancy Services Ltd), HDFC வங்கி, இன்போசிஸ் நிறுவனம் (Infosys) ஆகியவற்றின் சந்தை மதிப்பு, பாகிஸ்தான்,, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 238 பில்லியன் டாலர் ஆகும். இது இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள், பூட்டான் ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை  விட அதிகம். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 74.84 பில்லியன் டாலர்கள். நேபாளத்தின் பொருளாதார மதிப்பு 41.33 பில்லியன் டாலர்கள். மாலத்தீவின் பொருளாதார மதிப்பு 6.9 பில்லியன் டாலர்கள். பூட்டானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டு. ஆறு எட்டு பில்லியன் டாலர்கள்.

மேலும் படிக்க | AI: பங்குச் சந்தையிலும் பட்டையைக் கிளப்பும் செயற்கை நுண்ணறிவு! ஒரு நாளில் பில்லியனராகலாம்!

பாகிஸ்தான் பொருளாதாரத்தை விஞ்சிய டாப் இந்திய நிறுவனங்கள்

பாகிஸ்தானின் பொருளாதாரம் (Pakistan Economy) மதிப்பு 340.63 பில்லியன் டாலர்கள் என்று அளவில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 180 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. HDFC நிறுவனத்தின் சந்தை மதிப்பு 130 பில்லியன் டாலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தை மதிப்பு 86.48 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 85 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் உள்நாட்டு உற்பத்தியை விஞ்சி விடும்.

மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களைத் தவிர, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), எல்ஐசி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், ITC போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்புகள், டாப் இந்திய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளன. இவற்றின் சந்தை மதிப்புகள் சுமார் 60 -  80 பில்லியன் டாலர்கள் என்று அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்து வரும் இந்திய பொருளாதாரம்

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி சென்று, மூன்றாவது பொருளாதாரம் ஆக வளரும் என்று, சமீபத்தில் நிதி ஆயோகின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கான் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. FDல் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கி, டபுள் வருமானம் நிச்சயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News