ISRO Chairman Somanath Salary: நிலவில் கால் பதித்த நான்காவது நாடு, குறிப்பாக நிலவின் தென் துருவதத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா சமீபத்தில் படைத்தது. இதற்கு காரணம், இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம் தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது உலகையே திரும்பி பார்க்க வைத்தது எனலாம். சந்திரயான்-3 பின் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியடைந்த நிலையில், முதல் நாடாக இந்தியா அங்கு கால் பதித்தது. இதனால், உலகத் தலைவர்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை இஸ்ரோவின் கடுமையான உழைப்புக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர். 


சந்திரயான்-2 இலக்கை அடையாமல் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கால் பதித்தது குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை பலருக்கும் ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்தது. தங்களின் குழந்தைகளை இஸ்ரோ விஞ்ஞானிகளாக்க வேண்டும் என்றும் கூட சந்திரயான்- 3 வெற்றிக்கு பின் பலரும் கருத்து தெரிவித்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், இஸ்ரோ தலைவரின் சம்பள விவரம் தற்போது பேசு பொருளாகி உள்ளது. பிரபல தொழிலதிபரான, ஆர்பிஜி என்டரிபிரைசஸ் நிறுவனத்தின் தலைவருமான ஹர்ஷ் கோயங்கா, இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத்தின் சம்பளத்தைப் பற்றி விவாதிக்க X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் நெட்டிசன்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அவரின் சம்பளத்தை குறிப்பிட்டு, இது நியாயமான மாத வருமானமா என்று மக்களிடம் கேட்டதோடு மட்டுமல்லாமல், சோமநாத்தின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தையும் அவர் அந்த பதிவில் விளக்கியுள்ளார்.



மேலும் படிக்க | ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை 3 ஆவது முறையாக உயர்த்தப்பட்டது


"இஸ்ரோ தலைவர் சோமநாத்தின் மாத சம்பளம் ரூ. 2.5 லட்சம். இது சரியா?, நியாயமா? அவரைப் போன்றவர்கள் பணத்துக்கு அப்பாற்பட்ட காரணிகளால் தூண்டப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காகவும், அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தனிப்பட்ட நிறைவேற்றத்திற்காகவும் மற்றும் தேசப் பெருமைக்காகவும் செய்கிறார்கள். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்!" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இந்த இடுகையை அவர் இன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பதிவிட்டதில் இருந்து, ஆறு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஷேர் 8 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. பலர் தங்கள் எதிர்வினைகளை கமெண்ட் பகுதியில் பகிர்ந்துள்ளனர். அதில், சிலவற்றை இங்கு காணலாம். 


அனுதாபம் தான் காட்ட முடியும்


அதில் ஒருவர்,"நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் இது ஒரு அரசு வேலை என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய ஊதிய அமைப்பைக் கொண்டுள்ளனர். அது ISRO, DAE போன்றவையாக இருக்கட்டும். எனவே தனியார் துறையில் உள்ள நாங்கள் அவர்களுக்கு அனுதாபம் தான் காட்ட முடியும்"


"இந்த வருமானம் என்பது வீடு, கார், வேலையாட்கள் மற்றும் பிற பணமில்லாத சலுகைகள் போன்றவற்றையும் சார்ந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொன்னது போல், அவர் பணத்தை மிகப்பெரிய உந்துதலாகக் காணவில்லை. அவருக்கு, வெற்றியும், நாட்டின் பெருமையும் மிகப்பெரிய காரணியாகும்" என ஒரு பதிவர் குறப்பிட்டிருந்தார். 


விலைமதிப்பற்றவை


"நிச்சயமாக! இஸ்ரோவில் தலைவர் சோமநாத் போன்ற நபர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் அளவிட முடியாதது. அவர்களின் பணி பண வெகுமதிகளுக்கு அப்பாற்பட்டது, அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அவர்களின் தேசத்தின் மேம்பாட்டிற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பால் உந்தப்படுகிறது. அவர்கள் உண்மையான உத்வேகங்கள், மேலும் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை." எனவும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் ஒருவர்,"உண்மையில், இத்தகைய புத்திசாலித்தனமானவர்கள் பேரார்வம் மற்றும் நோக்கத்தால் இயக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் குறிப்பிடும் சம்பளம் அடிப்படை ஊதியம் மட்டுமே. மற்ற சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளும் சேர்க்கப்பட வேண்டும். விஞ்ஞானிகள் போதுமான அளவு கவனிக்கப்படுகிறார்கள், அவர்கள் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்கள். ஆம், அவர்கள் தனியார் துறையில் பல மடங்கு சம்பாதித்திருக்க முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் மருத்துவர்கள், நீதிபதிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்களுக்கும் இது பொருந்தும்," என்று மற்றொருவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | பூமியுடன் ஆதித்யா-L1 எடுத்த செல்ஃபி.... அசத்தல் வீடியோவை பகிர்ந்து கொண்ட ISRO!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ