ISRO launches 100th mission from Sriharikota: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) அதன் 100வது ராக்கெட்டை இன்று (ஜன. 29) காலை சரியாக 6:23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. GSLV-F15 வகையான அந்த ராக்கெட் NVS-02 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாள்களுக்கு முன் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்ற வி. நாராயணன் தலைமையில் விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட்டும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதலும் இதுதான். 



ISRO 100th Mission: முதல்முறையாக ராக்கெட் ஏவப்பட்டது எப்போது?


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்முறையாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், 100வது முறையாக இஸ்ரோ இன்று தனது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருக்கிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று SLV ராக்கெட்டை இஸ்ரோ முதல்முறையாக விண்ணில் செலுத்தியது. அப்போது இருந்து இப்போது வரை இந்திய அரசின்கீழ் தான் ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Union Budget 2025 | பழைய வரிக்கு Goodbye? புதிய வரிக்கு Welcome.. வருமான வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா?


இன்று காலை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தின் 2வது ஏவுத்தளத்தில் இருந்து GSLV-F15 ராக்கெட் இன்று காலை ஆக்ரோஷமாக புகையை கக்கி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட்டை ஏவுவதற்கு சரியாக 27.30 மணிநேரத்திற்கு முன் கவுண்டவுன் தொடங்கப்பட்டது. இந்த GSLV-F15 ராக்கெட் 50.9 மீட்டர் உயரம் கொண்டதாகும்.


ISRO 100th Mission: NVS-02​ செயற்கைகோளின் பயன்பாடு


இத்துடன் NVS-02 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி GSLV-F12 ராக்கெட் NVS-01 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று GSLV-F15 விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.


இன்று விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோளின் முக்கிய பயன்பாடுகள் என்னவென்றால், நிலப்பரப்பு, வான்வழி மற்றும் கடல்சார் நேவிகேஷனுக்கு உதவும். அதாவது, வழி அறிவதில் இது அனைவருக்கும் உதவும். மேலும், விவசாயம், கடற்படை மேலாண்மை, மொபைல் சாதனங்களில் இருப்பிட அடிப்படையிலான சேவைகள், செயற்கைக்கோள்களுக்கான சுற்றுப்பாதை நிர்ணயம் உள்ளிட்ட இன்னும் சில பயன்பாடுகளும் உள்ளன.


ISRO 100th Mission: யாருக்கெல்லாம் பயனளிக்கும்?


Navigation With Indian Constellation - NavIC என்பது இந்தியாவின் பிராந்திய அளவிலான நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பாகும். இந்த செயற்கைகோள் அமைப்பு இந்தியாவில் வசிப்பவர்களுக்கும், இந்திய நிலப்பரப்புக்கு அப்பால் சுமார் 1,500 கிமீ வரையிலான பகுதியில் வசிப்பவர்களுக்கும் துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேரம் (PVT) சார்ந்த சேவையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


Standard Positioning Service (SPS) மற்றும் Restricted Service (RS) என NavIC அமைப்பு இரண்டு வகையான சேவைகளை வழங்கிறது. இந்த SPS என்பது ஏறத்தாழ நாம் பயன்படுத்தும் GPS சேவைதான். அதாவது, ஜிபிஎஸ் சேவையை மேம்படுத்தவே இந்த SPS பயன்படுகிறது எனலாம். இந்த SPS சேவைப் பகுதியில் 20 மீட்டருக்கும் அதிகமான துல்லியமான நிலையையும், 40 நானோ வினாடிகளுக்கு மேல் துல்லியமான நேரத்தையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | வாடிக்கையாளர்களே கவனம்! பிப்ரவரி மாதம் 14 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. முழு விடுமுறை பட்டியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ