ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானை தவிர, மற்ற நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,230 எடை கொண்ட இந்த ஜிசாட் 9 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் கருவிகளை சுமந்து கொண்டு விண்ணில் பாய தயாராக உள்ளது.
இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும். தெற்காசிய நாடுகளில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் தொடர்பாக தகவல்களை ஜிசாட் 9 செயற்கைக்கோள் முன்கூட்டியே தெரிவிக்கும்.