இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று 20 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் இன்று காலை 9.26 ஏவப்பட்டது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் மாதம் 22-ம் தேதி காலை 9.26 மணிக்கு தொடங்கியது.


இந்த ராக்கெட்டை இன்று காலை 9.26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சத்ய பாமாசாட் (இது 1.5 கிலோ எடை), புனே என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த ஸ்லயம்(1 கிலோ எடை) மற்றும் இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2(எடை 727.5 கிலோ) ஆகிய செயற்கை கோள்களுடன் மற்றும் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கை கோள்கள் என மொத்தம் 20 செயற்கைக்கோள் அடங்கும். இவற்றின் மொத்த‌ எடை 1288 கிலோ ஆகும்.


பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், பசுமை இல்ல வாயுக்கள் குறித்த தகவல்களை சேகரித்து அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் இச்செயற்கைக்  கோள்கள் மேற்கொள்ளும்.


தற்போது முதல்முறையாக ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.