புத்தாண்டு அன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை
பெங்களூருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேடு ரோடு பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இந்த வேளையில், சில ஆண்கள் மதுபோதையில் பெண்கள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாககாட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான காட்சிகள் நேற்று தனியார் கன்னட தொலைக்காட்சியில் வெளியானது. இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி போலீஸ் நிலையங்களில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை.
முதற்கட்டமாக போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பெண்களிடம் தவறாக நடந்தவர்களை கண்டறிய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட இளம்பெண் அளித்து உள்ள பேட்டியில், கொண்டாட்டத்தின் போது ஒரு நெருக்கடியான நிலை ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவமானது இன்னும் அதிர்ச்சிகரமாக உள்ளது என்று கூறிஉள்ளார். வேண்டுமென்றே பெண்களுக்கு எதிராக புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடைபெற்ற சம்பவம் இதுவாகும் என்று கூறிஉள்ளார்.