மாலுமி சால்வடோர் கிரோன் தாயகம் போகலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

கேரள கடல் எல்லையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்தாலி வீரர்கள் 2 கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இதனால் இத்தாலி மாலுமிகளான இரண்டு பேர் மிஸிமிலினோ லட்டோர் மற்றும் சல்வடோர் கிரோன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில் இதில் ஒரு மாலுமியான சால்வடோர் கிரோன் உச்சநீதிமன்றத்திடம் தனது உடல்நலம் சரியில்லை என்றும் என்னை தாயகம் திரும்ப அனுப்ப வேண்டும் என ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசிடம் கருத்து கேட்டனர். ஜாமீன் அளிப்பதில் எந்த ஆட்சேபனை இல்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்ப்பட்டதால் 'சால்வடோர் கிரோன்' தனது தாயகமான இத்தாலி செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.