J&K ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து: 24 பேர் காயம்....
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பஸ் விழுந்ததில் 24 பேர் காயமடைந்தனர்; ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பஸ் விழுந்ததில் 24 பேர் காயமடைந்தனர்; ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள குனி நல்லா அருகே ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்திய-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) அதிகாரிகள் கொல்லப்பட்டதோடு 24 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 35 பயணிகளை கொண்ட பேருந்து சென்றுகொன்றிருந்த பொது திடீர் என கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் பேருந்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளார். ஆனால் அவரது முயற்சியானது தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து, கட்டுபாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புக்குழு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 பேர் காயமடைந்தனர், 1 பேர் இறந்தனர், நாங்கள் ஜம்முவிற்கு வெகுதூரத்தில் காயமடைந்தோம், 35 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது "என ரம்பன் துணை ஆணையாளர் ரெம்பன் தெரிவித்தார்.