Watch: 5 வயது சிறுவன் வீரர்களுக்கு சல்யூட் அடிக்கும் வீடியோவை பகிர்ந்தது ITBP
இந்தோ-திபெத்திய எல்லை காவல் ( ITBP) 5 வயது லடாக் சிறுவன் நவாங் நம்கியாலின் வீடியோவை ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்து கொண்டது
புதுடெல்லி: இந்தோ-திபெத்திய எல்லை காவல் ( ITBP) 5 வயது லடாக் சிறுவன் நவாங் நம்கியாலின் வீடியோவை ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்து கொண்டது, கடந்த மாதம் இணையத்தில் வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இந்த வீடியோவை தனது அதிகாரபூர் ட்விட்டர் கணக்கில், ITBP, எல்.கே.ஜி மாணவரின் “விரைப்பான” சல்யூட் வீடியோவைப் பகிர்ந்ததுடன், “வணக்கம்! மீண்டும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளது. எல்.கே.ஜியில் படிக்கும் 5 வயது மாணவர் நவங் நம்கியால், லடாக்கில் ஒரு எல்லை கிராமத்திற்கு அருகே இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) ஜவான்களுக்கு வணக்கம் செலுத்துவதை பார்க்கும் நமக்கும் உற்சாகமும், எதிர் கால சந்ததியினர் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கிறது.
லடாக்கின் (Ladakh) சுசுல் பகுதியில் உள்ள எல்லை கிராமங்களில் ஒன்றில் நமிகால் எல் கே ஜி வகுப்பு மாணவர். முன்னதாக அக்டோபரில், இந்து துடிப்பான, அழகான சிறுவன், ஐடிபிபி காவல் படை வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு லடாக்கில் ஜவான்களுக்கு வணக்கம் செலுத்துவதன் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியீவைத் தான் இப்போது அதிகார பூர்வமாக அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து துணை இராணுவப் படை இதனை பகிர்ந்து கொண்டுள்ளது. தேசிய எல்லைகளை பாதுகாக்கும் படையினருக்கு வணக்கம் செலுத்த, அவர்களுக்கு ஒரு விளக்கு ஏற்றுமாறு அனைத்து குடிமக்களையும் பிரதமர் மோடி (PM Narendra Modi) வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | நவம்பர் இறுதிக்குள் பிரம்மோஸ் ஏவுகணைகளை multiple launch செய்யும் இந்தியா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR