இது வெறும் ஆரம்பம் தான்: மோடி அரசை இடைவிடாது தாக்கும் ராகுல்..!
ரஃபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடியை இடைவிடாது தொடர்ந்து தாக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!
ரஃபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடியை இடைவிடாது தொடர்ந்து தாக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!
பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர், ரஃபேல் போர் விமானங்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டதா என்பது தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரியவரும் என்று கூறினார்.
ரஃபேல் பேரம் தொடர்பாக சர்ச்சைகள் கடுபிடியாகி வரும் நிலையில், விரைவில் பிரான்சில் ஒரு குண்டு வெடிக்கும் என்று ராகுல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்தே ஹாலண்டே தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜெட்லி, இரு நாடுகளின் எதிர்க்கட்சித்தலைவர்கள் ஒரே நேரத்தில் ஒரே குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது எப்படி தற்செயல் என ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
போபர்ஸ் ஊழலில் ராகுல்காந்தியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழி தீர்க்கும் வகையில் ராகுல் நடந்து கொள்வதாக கூறிய ஜெட்லி, இரண்டு அரசுகளுக்கிடையே நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரஃபேல் ஒப்பந்தத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் மாறி மாறி சமூக வலைத்தளத்திலும் வெளிப்படையாகவும் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்ட இதற்க்கு பாஜக கட்சி பதலடி கொடுப்பதையே தற்போது இரண்டு கட்சிகளும் முழுநேர வேலையாக செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து, இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, உத்தர பிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான அமேதிக்கு ராகுல் நேற்று சென்றார். இங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் தொண்டர்களிடையே பேசியபோது ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. நாட்டின் காவல்காரன் என கூறும் பிரதமர் மோடி, ஏழை எளிய மக்கள், ராணுவ வீரர்களிடம் இருந்து, 30,000 ஆயிரம் கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளார். அதை, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார்.
மோடி தலைமையிலான, பா.ஜ.க அரசு ஏழை எளிய மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அதே நேரத்தில், அம்பானி, விஜய் மல்லையா போன்றவர்களே பலனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.