திரைப்பட பைரசி மீறலுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 திரைப்படங்களை திருட்டுத்தனமாக இன்டர்நெட்டில் வெளியிடுவது, காப்புரிமை மீறலுக்கு தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது சட்ட விரோதமாகும்.


இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 1952ம் ஆண்டின் திரைப்பட சட்டப்பிரிவை திருத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 


இந்த சட்ட திருத்த மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.