ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தோடு, ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் ஆசாரை, பாகிஸ்தான் அரசு சிறையில் இருந்து ரகசியமாக விடுவித்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்வது வழங்கும் சட்டப்பிரிவு ரத்து மற்றும் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் படை பலத்தை அதிகரித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜம்மு - ராஜஸ்தான் செக்டார் மற்றும் சியால்கோட் இடையேயான எல்லையில், வரும் நாட்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேடப்படும் தீவிரவாதியான மசூத் ஆசாரை, புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் அரசு பாதுகாப்புக் காவலில் வைத்திருந்த நிலையில், அவரை ரகசியமாக விடுவித்து இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. 


இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்துவதற்காகவே, மசூத் ஆசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்து இருப்பதாகவும், அந்நாட்டில் வெளிப்படையாகவே தீவிரவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.