தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

JeM தலைவர் மௌலானா மசூத் அசாரின் செய்தியை புலனாய்வு அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், அரட்டை செயலி டெலிகிராம் வழியாக அனுப்பப்பட்ட இந்த செய்தி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழு அயோத்தியில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. டெலிகிராம் செயலியானது JeM மற்றும் பிற பயங்கரவாத குழுக்களால் பரவலாக தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகிறது என உளவுத்துறையால் கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்த தகவல்கள் குறித்து புலனாய்வு அமைப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுடனும் உள்ளீட்டைப் பகிர்ந்துள்ளன, மேலும் அயோத்தி மற்றும் நகரத்தின் பிற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏஜென்சிகள் செயல்பட்டு வருவதாகவும், இப்போது இந்தியாவில் உள்ள JeM நெட்வொர்க்கை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் JeM பல உயர்மட்ட தற்கொலை மற்றும் பிற தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். முன்னதனாக 2001-ல் இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதலை நடத்தியதற்கு பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிப்ரவரி 2019-ல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் JeM நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 40 CRPF வீரர்கள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


2019 மே 1 அன்று, JeM தலைவர் அசாரினை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் 1267 ‘உலகளாவிய பயங்கரவாதியாக’ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.