தனது போராளிகளுடன் தொடர்பில் இருக்க `TextNow` பயன்படுத்தும் JeM!
இந்தியாவில் உள்ள தனது போராளிகளுடன் தொடர்பில் இருக்க ஜெய்ஷ்-இ-முகமது (JeM) `TextNow` போன்ற செய்தியிடல் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறார் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளிப்படுத்தியுள்ளது!
இந்தியாவில் உள்ள தனது போராளிகளுடன் தொடர்பில் இருக்க ஜெய்ஷ்-இ-முகமது (JeM) 'TextNow' போன்ற செய்தியிடல் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறார் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வெளிப்படுத்தியுள்ளது!
புல்வாமா தாக்குதலை நடத்த பயங்கரவாத குழு இந்த செய்தி பயன்பாட்டைப் பயன்படுத்தியது எனவும், புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான யோசனை, JeM-ன் புதிய தளபதியும், அணியின் தலைவரான மௌலானா மசூத்தின் தம்பியுமான அப்துல் ரவூப்பின் சிந்தனை என குறிப்பிடப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு முன்பே பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், பல இடங்களில் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவதற்கும் இந்த முறை பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளுக்கு இடையிலான அரட்டை உரையாடலின் டிரான்ஸ்கிரிப்டுகள் ZEE மீடியாவிடம் கிடைத்திருப்பதாகவும், இந்த தகவல்கள் கடந்த ஆண்டு புல்வாமாவில் நடத்தப்பட்ட CRPF ஊழியர்கள் மீதான தற்கொலை குண்டுவீச்சு தாக்குதல் குறித்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
ஆதாரங்களின்படி, 'TextNow' என்ற செய்தி தனித்துவமானது, ஏனெனில் ஒருவரது வாட்ஸ்அப் எண்களையும் இதில் பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் அனுப்புநரின் அடையாளம் அநாமதேயமாக வைக்கப்படுகிறது. இந்த அம்சமானது புலனாய்வு அமைப்புகளுக்கு உரையாடலை நிகழ்த்துபவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி குறைந்தது 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பணியாளர்கள் கொல்லப்பட்டனர். JeM தற்கொலை குண்டுதாரி வெடிபொருள் நிறைந்த வாகனத்தை பணியாளர்கள் பேருந்தில் மோதியதில் இந்த தாக்கதல் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.