மத்திய அமைச்சரான அருண் ஜேட்லி தான் வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பை இன்று மீண்டும் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக  கடந்த மாதம் அவர் அமெரிக்கா சென்றிருந்தார். இதையடுத்து, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதித் துறையை கூடுதலாக கவனித்து வந்தார். 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டையும் மக்களவையில் அவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார்.


இந்த நிலையில், அருண் ஜேட்லி  அமெரிக்காவிலிருந்து அண்மையில் நாடு திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர், தாம் ஏற்கெனவே வகித்து வந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பை இன்று மீண்டும் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதை தொடரந்து, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 70 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புலவாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில் வியாழக்கிழமை திடீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 40 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். இதற்கு ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 


இது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது, பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இது பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. உயிரிழந்த வீரர்களுக்காக இந்த தேசம் தலை வணங்குகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கொடூரச் செயலுக்கு பயங்கரவாதிகளுக்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டப்படும் என்றார்."