ஜாமியா வன்முறை: காங்., MLA ஆசிப் முகமது உட்பட 3 பேருக்கு சம்மன்!
ஜாமியா வன்முறை வழக்கு குறித்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் முகமது உட்பட இருவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்!!
ஜாமியா வன்முறை வழக்கு குறித்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் முகமது உட்பட இருவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்!!
டெல்லி: குடியுரிமை எதிர்ப்புச் சட்டத்தின் போராட்டத்தின் போது ஜாமியா நகரில் நடந்த வன்முறைகள் குறித்து விசாரிக்கும் டெல்லியின் சிறப்பு புலனாய்வுக் குழு, முன்னாள் காங்கிரஸ் MLA ஆசிப் முஹம்மது கான், உள்ளூர் அரசியல்வாதி ஆஷு கான் மற்றும் ஜாமியா சந்தனைச் சேர்ந்த ஐசா ஆர்வலர் உள்ளிட்ட மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மூவரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணையில் சேர வரவழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த ஜாமியா நகர் வன்முறைக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட இரண்டு FIR-களில் இந்த மூவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 15 ஆம் தேதி, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவுக்கு அருகிலுள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் காவல்துறையினருடனான சண்டையில் மாணவர்கள் நடத்திய குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் முடிவடைந்ததை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு அருகே வன்முறை வெடித்தது. போராட்டத்தில் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் பிற பொது சொத்துக்களும் சேதமடைந்தன. இந்த மோதலில் பல மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். வளாகத்திற்குள் மாணவர்கள் மீது அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
டிசம்பர் 15 ஆம் தேதி இரவு, டெல்லி காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து பல மாணவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் 'பலவந்தமாக' நுழைந்ததாக ஜாமியா நிர்வாகம் கூறியது.