ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவு
Earthquake ALERT: காஷ்மீரில் நிலநடுக்கம் சற்று அதிகமாவும் வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் டெல்லி-என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலநடுக்கம் சற்று அதிகமாவும் வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் டெல்லி-என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்தது. இருப்பினும், சொத்து சேதம், காயம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. நிலநடுக்கம் குறித்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சிலர் குறைந்தது 20 வினாடிகள் நிலம் அதிர்ந்ததாக ட்வீட் செய்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR