Jammu - Kashmir : இரண்டு முக்கிய ஹைபிரிட் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கைது
ஜம்மு-காஷ்மீர் பந்திபோராவில் இரண்டு `ஹைபிரிட்` பயங்கரவாதிகள் பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை (மே 7, 2022) வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இரண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய ஹைபிரிட் பயங்கரவாதிகளை கைது செய்தது. ஹைபிரிட் பயங்கரவாதிகள் என்பவர்கள் பொதுமக்கள் போல் வேறு பணியில் இருந்து கொண்டே பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள்.
பந்திபோராவில் இந்த இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
" இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகளும் பந்திபோராவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்வதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், பண்டிபோரா போலீஸ் உடன் 13 RR ராணுவம் மற்றும் 3வது BN சிஆர்பிஎஃப் ஆகிய படை பிரிவுகள் வுல்லர் வான்டேஜ் அரகம் அருகே கூட்டு சோதனைச் சாவடி நிறுவியது" என்று ஒரு போலீஸ் அறிக்கை ஒன்று கூறுகிறது.
பாதசாரிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்த போது, ஆல்டோ காரில் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் செல்வது கண்டறியப்பட்டது. எண் JK13-G 6139 வாகனத்தில் இருந்தவர்கள், சோதனையின் போது தங்கள் அடையாளத்தை மறைக்க முயன்றார். படை பிரிவினர் சோதனை நடத்தும் போது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் சோதனைச் சாவடியை உடைத்து தப்பிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்.
இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகள், ஹெர்போரா அச்சன் புல்வாமாவைச் சேர்ந்த அபித் அலி (27) மற்றும் ஹெர்போரா அச்சன் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் ஹசன் பர்ரே (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேடுதலின் போது, ஏகே 47 ரக துப்பாக்கிகள், 30 துப்பாக்கி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் என ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போஒலிஸார் எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வருடங்களில் இதுவரை 33 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஹைபிரிட் பயங்கரவாதிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஊடகங்களை பார்த்து பயந்தாரா மோடி?? உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR