ஜம்மு பயங்கரவாதிகள் கைவரிசை: ரூ.5,39,000 கொள்ளை!
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெகராவில் உள்ள வங்கியில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் கொள்ளையடித்து உள்ளனர்.
பிஜ்பெகராவில் உள்ள வங்கி ஒன்றில் ரூ. 5,39,000-னை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு கிடைக்கும் நிதியை பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக முடக்க செயல்பட்டு வருவகின்றன.
இந்நிலையில் பயங்கரவாதிகள் வங்கியில் இருந்து பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதன் முழுமையான தகவல் கணக்கு செய்தால் மட்டுமே தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.