திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான்; இந்திய ராணுவம் தக்க பதிலடி
பாகிஸ்தான் பூஞ்ச் செக்டரில் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து சரியான பதிலடி தரப்பட்டது.
புதுடெல்லி / ஜம்மு: காஷ்மீரில் (Kashmkir) இருந்து 370 வது சிறப்பு பிரிவு (Article 370) நீக்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் (Pakistan) எல்லையில் தொடர்ந்து போர்நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இன்று (சனிக்கிழமை) காலை கூட, போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் பூஞ்சின் (Poonch) ஷாப்பூர் கிரானி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவம் (Indian Army) உடனடியாக பதிலடி தந்தது. இன்னும் அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
நமக்கு கிடைத்த தகவல்களின்படி, பூஞ்சின் ஷாப்பூர் கிரானி செக்டரில் காலை 11 மணிக்கு பாகிஸ்தான் ஷெல் திடிரென துப்பாக்கிச் சூடு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.