ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழும் பயங்கரவாதாம்: 4 போலீசார் காயம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்மாவா காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 4 காவல் துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்; -புல்மாவா போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறோம். இந்த பணியில் 182 சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பருத்தி மற்றும் சணல் உற்பத்தி தொழிற்சாலை ஆலையில், நேற்று இரவு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலும்,நேற்று முன்தினம் அதே பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்துள்ளது குறிபிடத்தக்கது.
அடுத்தடுத்து, பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெறுவதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.