ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இருந்து துண்டிக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மிரில் நடைப்பெற்று வந்த மெஹ்பூபா முப்தி அரசுக்கு பாஜக தனது ஆதரவை பாஜக, விலக்கிக் கொண்டதால் அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில், ஜம்முவில் நடைப்பெற்ற ஜனசங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள ஜம்மு சென்றார் அமித்ஷா.


பாரதிய ஜனதா கட்சியில் முதன்மை கட்சியான பாரதிய ஜனதாக சங்-ன் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாதவது.... முகர்ஜியின் இறுதி ஆசை ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஷ்த்து தான். எனவே ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இருந்து துண்டிக்கை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.


மேலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதற்கு முகர்ஜியே காரணம், காஷ்மிரின் வளர்ச்சிக்காகவே அவர் பெரிதும் பாடுப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


பொதுமக்களின் வளர்ச்சிக்காகவே மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்ததாகவும், அந்த இலக்கை எட்டமுடியாத போது கூட்டணி ஆட்சியில் பயனில்லை என்பதால் தங்களது ஆதரவினை விலக்கி கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.