Watch: காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்
இந்திய ரயில்வேயின் இந்த முயற்சி மிக நுட்பமான பொறியல் திறனுக்கு சாட்சியாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரை, நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே, உலகின் மிக உயரமான இரும்பு பாலம் அமைய உள்ளது. 1,172 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த இரும்பு பாலம் ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருக்கும்.
இந்திய ரயில்வேயின் இந்த முயற்சி மிக நுட்பமான பொறியல் திறனுக்கு சாட்சியாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். செனாப் ஆற்றின் மேல் அமைக்கப்படும் செனாப் பாலம், உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாலமாக இருக்கும் என்று பியூஷ் கோயல் (Piyush Goel) ட்வீட் செய்துள்ளார்.
இந்த பாலத்தின் நீளம் 467 மீட்டர் மற்றும் உயரம் 359 மீட்டர் ஆகும். உலக அதிசயங்களில் ஒன்றான பாரிசில் உள்ள ஈஃபிள் டவரின் உயரம் 324 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் அதிகபட்சமாக மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றை தாங்கக் கூடிய திறனுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ரயில்வே பாலத்திற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
ALSO READ | வரலாறு படைத்துள்ள NASA; Ingenuity ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR