சுமார் 5000 ஆண்டுகள் பழைமையான அமர்நாத் குகைக்கோயிலுக்கு, ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வருகை தந்து இந்த பனிலிங்க வடிவிலான சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் நிலைமை காரணமாக, ஜம்மு-காஷ்மீர் அரசு அமர்நாத் யாத்திரை ரத்து செய்ய முடிவு செய்ததுள்ளது. பாரம்பரிய நடைமுறைகள், பூஜைகள் அனைத்தும்  வழக்கம் போல் செயல்படும் என அமர்நாத யாத்திரை வாரியம் தெரிவித்துள்ளது. 


அமர்நாத ஆலய வாரியத்துடன் கலந்துரையாடிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​இந்த முடிவை அறிவித்தார். இருப்பினும், பக்தர்கள் ஆன்லைனில் “ஆரத்தி” தரிசனம் செய்ய  வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | TTD: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது


அமர்நாத் யாத்திரை பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய வழித்தடங்களில் இருந்து வழித்தடங்களில் இருந்து ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிறைவடைய திட்டமிடப்பட்டது. அமர்நாத் யாத்திரை என்பது சிவபெருமானின் 3,880 மீட்டர் உயர குகைக் கோயிலுக்கு 56 நாள் மேற்கொள்ளும் யாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது.


தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. கோவிட் -19 இன் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய யாத்திரைக்கான பதிவு ஏப்ரல் 22 முதல் நிறுத்தப்பட்டது.


கடந்த ஆண்டு கோவிட் பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்டது மற்றும் பூஜைகள் குகை கோயிலில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே யாத்திரை நிறுத்தப்பட்டது.


யாத்திரையை ரத்து செய்வதற்கான முடிவை துணை நிலை ஆளுநர் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலோசனைக் குழு எடுத்துள்ளது. மத்திய அரசும் இது தொடர்பாக பரிந்துரைக்க முடியும். இருப்பினும் இறுதி முடிவு, அமர்நாத் ஆலய வாரியத்தின்  குழுவால் எடுக்கப்படுகிறது.


ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR