COVID-19: பள்ளிகள் திறப்பதைப் பற்றி மத்திய அரசு கூறுவது என்ன..!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை ஏற்படலாம் என்ற பீதியும் மக்கள் மனதில் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2021, 03:00 PM IST
COVID-19: பள்ளிகள் திறப்பதைப் பற்றி மத்திய அரசு கூறுவது என்ன..!!  title=

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை ஏற்படலாம் என்ற பீதியும் மக்கள் மனதில் உள்ளது. இது போன்ற ஊகங்களுக்கு மத்தியில், மூன்றாவது அலை ஏற்பட்டால், அது குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்றும் பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் புதிய COVID-19 பாதிப்புகள் குறைந்து வருகிறது. தினசரி COVID-19 புதிய பாதிப்புகள் 4 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகிய நிலையில், தற்போது பாதிப்புகள் 50,000 - 60,000 என்ற வகையில் பதிவாகின்றன என்பது நிம்மதி அளிக்கும் விஷயமாகும்.

நாட்டில் கல்வி நிறுவனங்கள் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்கள்  அன்லாக் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும், நாட்டில் உள்ள பள்ளிகள் மீண்டும்  எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகின்றது. 

இந்நிலையில், பள்ளிக்கள் திறக்கப்படுவது குறித்து, பெற்றோர், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ள சில சந்தேகங்களுக்கு, நிதிஆயோக்கின் (NITI Aayog) சுகாதார துறை உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் விடை அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பால், “மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து தீர்மானிக்கும்போது நிறைய விஷயங்களை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

பெரும்பான்மையான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி (Corna Vaccine) போட்ட பின் தான் பள்ளிகளை மீண்டும் திறப்பதை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று டாக்டர் வி.கே.பால் கூறினார்.

ALSO READ | TN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,180 பேர் பாதிப்பு, 180 பேர் உயிர் இழப்பு  

 

“அதற்கான நேரம் வர வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் பள்ளிகள் மீண்டும்  திறக்கப்பட்டு, ஆனால், மீண்டும் பரவல் தொடங்கியது அவை மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நமது மாணவர்களையும் ஆசிரியர்களையும் இதுபோன்ற சூழ்நிலையில் சிக்க வைக்க நாங்கள் விரும்பவில்லை, ”என்று டாக்டர் பால் கூறினார்.

முன்னதாக, எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மூன்றாவது அலை 'தவிர்க்க முடியாதது' என்றும் அது அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் நாட்டைத் தாக்கும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், இந்தியா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20, 2021), பதிவான தரவுகளின் படி,  கடந்த 24 மணி நேரத்தில் 58,419 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7,29,243 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில். பரிசோதனை செய்தவர்களில் தொற்று பாதிப்பு உறுதியானவர்கள் விகிதம் (positivity rate)இப்போது 3.43% ஆக உள்ளது அதே நேரத்தில் தினசரி நேர்மறை விகிதம் (positivity rate) 3.22% ஆக குறைந்துள்ளது.

ALSO READ: Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News