புல்வாமா தாக்குதலை போன்று மற்றொரு தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), மேலும் புல்வாமா-போன்ற தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


JeM மீது வரும் புதிய தாக்குதல்களைப் பற்றி பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உளவுத்துறை அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட குறிப்பிட்ட தகவல்களின் படி, ஜம்மு மற்றும் ஹிஸ்புல் உஜ் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளான ஜம்மு மற்றும் காஷ்மீரில் சௌகிபல் மற்றும் தங்தார் வழித்தடங்கள் மீது பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவ வாகனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. 


மேலும், இதில் புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்து விட்டதால் அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு, பெரிய அளவிலான வெடிகுண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையில் முந்தைய தாக்குதலை விட அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு வெளியே நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பிப்ரவரி 19 உளவுத்துறை அறிக்கையின் படி, காஷ்மீர் உட்பட 3 இடங்களில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக 3 தற்கொலைப்படையினர் உள்ளிட்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்த 21 பயங்கரவாதிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் இந்தியா நிலை குலைந்து போகும் என்பதால் உளவியல் ரீதியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் வகுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.