டெல்லி மான்சரோவ பார்க் பகுதியில் திருடர்கள் ஒரு பெண் ஆபரணம் மற்றும் மொபைல் போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் தற்போது பாலியல் வன்முறை, வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகிய அனைத்து வன்முறைகளும் அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வாலியால் வன்முறை, வழிப்பறி என சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 


வட மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் சரளமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு சுமார் பத்து புகார்கள் எழுகின்றது. இது போன்று டெல்லியில் மான்சரோவர் பார்க் பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு தெருவில் இரவு நேரத்தில் ஒரு பெண் நடந்து வருகிறார். அவரின் பின்னால் ஒரு ஆண் நபர் வருகிறார். சிறிது நீரன் கழித்து அந்த ஆண் நபர் அந்த பெண்மணியின் கழுத்தை பிடித்து நெரிக்கிறார். அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த ஆண் நபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த ஆபரணம் மற்றும் அவரின் மொபைலை எடுத்துவிட்டு ஓடுகிறார்.


பின்னர் அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வானது அங்கு போருத்தபட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது.      


இதை தொடர்ந்து, அந்த நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.