Jharkhand News: ஜார்கண்டில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும், மகா கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவருமான சம்பாய் சோரன், தனக்கு 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கோரி ஆளுநர்  சிபி ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதனையடுத்து ஆளுநர் மாளிகை இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கியதாக ஆளுநர் மாளிகை அதிகாரி தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடிதத்தில் சம்பாய் சோரன் கூறியது..


ஜார்கண்ட் மாநில சட்டமன்றக் கட்சித் தலைவர் சம்பாய் சோரன், ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில், ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை நேற்று (புதன்கிழமை) இரவு ராஜினாமா செய்ததாகவும், அதை ஆளுநர் மாநிலை நேற்று (புதன்கிழமை) இரவு 8.45 மணிக்கு ஏற்றுக்கொண்டது. 


ஆனால் கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் ஆட்சி இல்லை. குழப்பமான சூழல் நிலவுகிறது. நீங்கள் தான் அரசியலமைப்புச் சட்டத் தலைவராக இருப்பதால், விரைவில் மக்கள் ஆட்சி அமைக்க வழி வகுக்க வேண்டும். தற்போது நிலவி வரும் குழப்பத்தில் இருந்து மாநிலத்தை மீட்டெடுப்பீர்கள் என்று எம்எல்ஏக்களும், மாநில மக்களும் எதிர்பார்த்து இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.


மேலும் தனக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், 43 எம்எல்ஏக்கள் கையெழுத்துடன் ஆதரவு கடிதங்களை ராஜ்பவனில் சமர்ப்பித்து உள்ளதாகவும் என ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். 


மேலும் படிக்க - Hemant Soren: ஹேமந்த் சோரன் கைது...? அடுத்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் இவரா?


மாலை 5.30 மணிக்கு சந்திக்க ஆளுநர் அழைப்பு


மதியம் 3 மணிக்கு நேரம் ஒதுக்குமாறு ஆளுநர் மாளிகைக்கு சம்பை சோரன் கோரிக்கை வைத்தார். ஆனால் மாலை 5.30 மணிக்கு சந்திக்க ஆளுநர் மாளிகை நேரம் ஒதுக்கியுள்ளது. அதேநேரத்தில் 5 முக்கிய எம்எல்ஏக்கள் மட்டுமே சந்திக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் பெரும்பான்மையை உறுதி செய்வதற்காக, தனது 43 ஆதரவு எம்எல்ஏக்களுடன் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஜார்கண்டில் மாநில சட்டமன்றக் கட்சித் தலைவர் சம்பாய் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.



பாஜகவின் எந்த முயற்சியும் பலிக்காது


முன்னதாக, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், "கூட்டணியை வழிநடத்தும் ஜேஎம்எம் சட்டமன்றக் கட்சித் தலைவர் சம்பாய் சோரன், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளார்" என்று கூறினார். மாலை 5.30 மணிக்கு மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியதாக ராஜ்பவன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும், "எங்களுக்கு அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் எங்களுக்குத் தெரியவில்லை. ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் தாமதம் செய்தால், அவர்களின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஹைதராபாத் பறந்து விடுவார்கள். பாஜகவின் எந்த வேட்டையாடும் முயற்சியும் பலிக்காது என்று ராஜேஷ் தாக்கூர் கூறினார்.


மேலும் படிக்க - INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்... ராகுல் காந்தி செய்த அந்த காரியம் - நிதிஷ் குமார் தடாலடி!


ஐதராபாத் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் 


ஒருபுறம் எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு நடத்தி ஆட்சி அமைக்க அவகாசம் வழங்கக்கோரி சபாய் சோரன் மறுபுறம் எம்.எல்.ஏ.க்களை ஐதராபாத்தில் மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது


சம்பாய் சோரன் தேர்வு


ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் புதன்கிழமை இரவு ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் கட்சியின் விசுவாசியும் மாநில போக்குவரத்து அமைச்சருமான சம்பாய் சோரன், அடுத்த புதிய முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அறிவித்தார்.


மகா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை


நில மோசடியில் ஈடுபட்ட ஹேமந்த் சோரன் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்படுவதற்கு முன்பாக, தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்வதற்கு முன்பு, சட்டமன்றக் கட்சியின் தலைவராக சம்பை சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று (புதன்கிழமை) இரவு சம்பை சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என தனது கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் தற்போது வரை அவருக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு வரவில்லை. மறுபுறம், மகா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்று பாஜக கூறி வருகிறது.


மேலும் படிக்க - ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்டதா? விளக்கம் அளித்த காங்கிரஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ