லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஆகஸ்ட் 30 ம் தேதி சரணடையும்படி அவரை கேட்டுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீஹார் முதல்வராக இருந்த போது கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, பல கோடி மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுக்குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்த வழக்கு ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.


இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், இந்த வழக்கிற்கு 5-லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்ற தண்டனை வழங்கியது.


சிறையில் தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவ், தனக்கு மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் வழங்க வேண்டும் என மனு அளித்தார். இந்த மனுவை அடுத்து, அவருக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது. 


கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி எனக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவருக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது. மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மீண்டும் அவருக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது. 


அடுத்த வாரம் சிறைக்கு செல்லவேண்டிய நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி மீண்டும் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார். அந்த மனுவில், தற்போது லாலு பிரசாத் யாதவ், மும்பை ஆசிய ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருக்கு மூன்று மாதம் காலம் ஜாமீன் வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீனை நீட்டிக்க முடியாது எனக் கூரியதோடு, வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்ததில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.