புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசாங்கம் தீபாவளி பரிசை வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முடிவு நேரடியாக நான்கரை லட்சம் ஊழியர்களுக்கு பயனளிக்கும். அரசாங்கத்தின் இந்த முடிவு புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு பொருந்தும். இந்த  7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அக்டோபர் 31 முதல் அமலுக்கு வர உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் அக்டோபர் 31 முதல் நடைமுறைக்கு வரும் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுதொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் படி, தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரியும் 4.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு குழந்தைகள் கல்வி கொடுப்பனவு, விடுதி கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, விடுப்பு பயண சலுகை (எல்.டி.சி), நிலையான மருத்துவ கொடுப்பனவு போன்ற அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஆண்டுக்கு சுமார் 4800 கோடி செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆண்டு செலவு: 
- குழந்தைகள் கல்வி கொடுப்பனவு       - ரூ. 607 கோடி
- விடுதி கொடுப்பனவு                               - ரூ. 1823 கோடி
- போக்குவரத்து கொடுப்பனவு                - ரூ. 1200 கோடி
- பயண சலுகை (LTC)                                 -ரூ. 1000 கோடி
- நிலையான மருத்துவ கொடுப்பனவு  - ரூ. 108 கோடி
- பிற கொடுப்பனவுகள்                              -ரூ. 62 கோடி


மொத்த தொகை                                          - ரூ. 4800.00 கோடி