ஜம்மு- காஷ்மீர் உரியில் பாதுகாப்பு படை-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை

வடக்கு காஷ்மீரில் உரியில் எல்லைக் பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டது.
ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உரியில் எல்லைக் பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டது.
கால்காய் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்பு படை தொடங்கியது.
குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடியை கொடுக்க தொடங்கினர்.
இதனையடுத்து இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சண்டை தொடர்பாக முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.