J&K: புல்வாமா CRPF முகாம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சு...
காஷ்மீர் புல்வாமா பகுதியில் உள்ள CRPF முகாம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் காயம்...!
காஷ்மீர் புல்வாமா பகுதியில் உள்ள CRPF முகாம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் காயம்...!
ஜம்மு அற்றும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புல்வாமாவிலன் நியூயாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 183 பட்டாலியன் முகாமில் பயங்கரவாதிகள் ஒரு குண்டுவீசி தக்கதல் நடத்தினர். ஆனால் அந்த குண்டு வெடித்து சிதறவில்லை.
இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது சி.ஆர்.பி.எப். மற்றும் ரி.ஐ.டி இந்திய பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பாதுகாப்பு வீரருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, காயமடைந்த பாதுகாப்பு ப்படை வீரரை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் நடந்துள்ளது.