புதுடெல்லி: ஜே.என்.யூ. மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக கடிதம் எதுவும் சிக்கவில்லை என்று டெல்லி காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்ததை மணிப்பூர் மாணவர் முதலில் பார்த்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் முத்துகிருஷ்ணனின் செல்போன், மற்றும் உடைமைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருதாக தெரிவித்தார். 


உயிரிழந்தவர் சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்து கிருஷ்ணன் ஆவார். 30 வயதான இவர் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலை கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார். இந்த தற்கொலை குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.