JRHU பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!
ஜகத்குரு ரம்பத்ராச்சாரி ஊனமுற்ற பல்கலைக் கழகத்தின் 7வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார்.
ஜகத்குரு ரம்பத்ராச்சாரி ஊனமுற்ற பல்கலைக் கழகத்தின் 7வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார்.
இன்று (ஐன.,8) நடைப்பெறவுள்ள இந்த விழாவில் பங்கேற்பதற்காக உத்திரப்பிரதேச மாநிலம் சித்திராக்-ற்கு பயணிக்கின்றார் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
மேலும் JRHU பல்கலைக்கழகத்தின் 579 மாணவர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்குகிறார் என முன்னதாக அப்பல்கலை துணை வேந்தர், பேராசிரியர் யோகேஷ் சந்திர துபே தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள தித்ரயல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் சித்திரக்கோட்-ல் பல்வேறு திட்டங்களை குறித்தும் ஜனாதிபதி பார்வையிடடுகின்றார்.