பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகனும் உயிரிழந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி குருகிராம் ஆர்காடியா சந்தை பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த் சர்மாவின் மனைவியும், மகனும் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது, திடீரென அவர்களுக்கு பாதுகாப்புக்கு இருந்த காவலரே துப்பாக்கியால் அவர்கள் இருவரையும் சுட்டார். 


இதனால், படுகாயமடைந்த நீதிபதியின் மகனை தூக்கி அந்த காவலர் காரில் ஏற்ற முயற்சிப்பதும், ஏற்ற முடியாததால் காரை ஓட்டிக் கொண்டு செல்வதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நீதிபதியின் மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் (Dhruv) ஆகியோரை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ரீத்து உயிரிழந்த நிலையில், அவரது மகன் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், மூளைச்சாவடைந்த அவரது மகன் துருவ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் துருவும் உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை தானம் கொடுக்கப்பட்டன. முன்னதாக, இருவரையும் சுட்டுவிட்டு தப்பிய பாதுகாவலர் மஹிபால் சிங்கை, சில மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.