புது தில்லி: இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் சுப்ரீம் கோர்ட்டில் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இன்று மதியம் 12.15 மணிக்கு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.


நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு எதிராக கடும் விமரிசனங்களை முன் வைத்தவர் நீதிபதி செல்லமேஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது


நீதிபதிகள் கூறுகையில், கடந்த சில மாதங்கலாக விரும்பத்தகாத நிகழ்வுகள் சுப்ரீம்கோர்ட்டில் நடக்கின்றன. இப்படியே போனால் ஜனநாயகம் நிலைக்காது. இந்தியா என்று கிடையாது, உலகின் எந்த நாட்டிலும் ஜனநாயகம் நிலைக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.