லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவியேற்றுக் கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அந்த அமைப்புக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருந்தார்.


அந்த அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவியேற்றுக் கொண்டார்.


அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.