தெலுங்கானாவில் தனது தலைமையிலான அரசை கலைத்த சந்திரசேகர ராவ்
தெலுங்கானா மாநிலத்தில் தங்கள் அரசை கலைத்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், அம்மாநில ஆளுநரை சந்தித்து, தங்கள் அரசு சட்டசபை கலைத்துக் கொள்கிறது. அதற்க்கான கடிதத்தை கொடுத்தார்.
அடுத்த ஆண்டு மே மாதம் பொது தேர்தலும் நடைபெற உள்ளது. எனவே தெலுங்கான சட்டசபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஒன்றாக நடக்க வாய்ப்புகள் மிக அதிகம். இதை விரும்பாத சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடந்தால், அதிக இடங்களை பெறலாம் என்ற நோக்கத்தில், இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
ஒரே மாநிலமாக இருந்த ஆந்திர பிரதேசம், கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கான என் இரு மாநிலங்களாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு ஒரு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் தெலுங்கான மாநிலத்தில் ந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.