தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்றார்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்று, கடந்த 11 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தெலங்கானாவின் 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.


தென் இந்தியாவை பொருத்த வரை 119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரபப்டி, தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சி 90 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. 


இதனையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவராகவுள்ள சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (டிச.13) நண்பகல் 1.30 மணிக்யளவில் அம்மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். அவருக்கு தெலங்கானா ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் இவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.