மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். 


இந்நிலையில் கமல்ஹாசன், தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று டெல்லி பயணம் செய்தார்.


இந்நிலையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.