கர்நாடகா மாவட்டங்களில் பாரம்பரியமிக்க கம்பாளா விளையாட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் போட்டியின் போது எருமை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, கடந்த 2014-ம் ஆண்டில் ‘கம்பாளா’ போட்டிக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ‘கம்பாளா’ விளையாட்டு கமிட்டி வழக்கு தொடர்ந்து உள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் பீட்டா அமைப்பு எதிர்மனுதாரராக உள்ளது.


‘கம்பாளா’ போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் மங்களூரு டவுன் ஹம்பன் கட்டா சர்க்கிளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில் நேற்று மங்களூரு அருகே உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வந்த பல்வேறு அமைப்பினர் கம்பாளா போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். இதற்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர்.


இதற்கிடையே ‘கம்பளா’ போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கம்பாளா போட்டியை நடத்த சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கோரிக்கை விடுத்து உள்ளார்.


இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒத்த கருத்துடைய பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.