இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று கூகுளில் தேடினால் கன்னடம் என கூகுள் (Google) காட்டியிருந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கன்னட மொழி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செயலுக்கு கன்னட (Kannada Language) மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் (Google Search) நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கூகுள் நிறுவனத்தின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களிலும் பல்வேறு மக்கள் கண்டன கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.


ALSO READ | Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்


இது குறித்து மேலும், கன்னட, கலாச்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த கேள்விக்கு இதுபோன்ற பதிலைக் காட்டுவதற்காக கூகுள் நிறுவனத்திற்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் வழங்கப்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும் கூகுள் நிறுவனம் மீது கன்னட மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்களும் கூகுளை விமர்சித்து வருகிறார்கள்.


இந்நிலையில், தற்போது இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அதில் கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என தெரிவித்துள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.


ALSO READ | இந்த BSNL ரீசார்ச் திட்டத்தில் ரூ.10,000 மதிப்பிலான Google smart speaker கிடைக்கிறது, முந்துங்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR